கவிதை சொல்லும் கதை
ஒரு குழந்தை அழுது அடம் பிடித்தது. சாப்பிட, உடை மாற்ற, பள்ளிக்குச் செல்ல என அனைத்திற்கும் தன் தாயிடம் அழுது ஆர்ப்பாட்டம் செய்தது. தாய் எவ்வளவு அடித்துப் பார்த்தும் பயனில்லை. மனோதத்துவம் தெரிந்த தந்தை தன் குழந்தையிடம் நேரடியாக எதையும் சொல்லவில்லை. மாறாக, வழக்கமாக தன் குழந்தைக்கு வாங்கி வரும் பொம்மை, கார் போன்ற விளையாட்டுப் பொருட்களை வைத்தே சரி செய்தார். எப்படி எனில், ஒவ்வொரு முறை பரிசு வழங்கும்போதும், தன் குழந்தை செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கு ஒரு பரிசு என்ற வகையில் வழங்கத் துவங்கினார். தன் குழந்தையை எந்தக் காரணத்திற்காகவும் திட்டுவதில்லை. குழந்தையும் தன் தந்தை பேச்சுக்கு இணங்கியது.
இனி கவிதை வரி.
குழந்தைகள் வைரங்கள்!
திட்டுவதை விடுங்கள்!
தீட்டுவதைத் துவக்குங்கள்!
Visit us: /www.uaetamilsangam.com/

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home